சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்

சூலூர் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-05-04 01:30 IST

சூலூர்

சூலூர் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பால்குட ஊர்வலம்

கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் ரோட்டில் புகழ் பெற்ற காட்டூர் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் மதியம் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணியளவில் நொய்யல் ஆற்றின் கரையில் இருந்து அம்மனை அலங்கரித்து, மேள-தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்துடனும், திரளான ஆண்கள் தீர்த்த குடத்துடனும் ஊர்வலமாக வந்தனர்.

திருக்கல்யாணம்

பின்னர் கோவலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் மதியம், இரவு என 2 வேளைகளில் அன்னதான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று சூலூர் பசும்பொன் கல்வி பண்பாட்டு சமூக அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, வருகிற 9-ந் தேதி மகாமுனி, மதுரை வீரன் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்