வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

மகளிர் உரிமைத்தொகை பெற வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடந்தது.;

Update:2023-09-07 00:30 IST

மன்னார்குடி;

தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மன்னார்குடி வட்டார பகுதியில் விண்ணப்பித்த மகளிரில் 1,382 பேருக்கு வங்கி கணக்கு இல்லாமல் உள்ளது தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நேற்று மன்னார்குடியில் நடந்தது. மன்னார்குடி பந்தலடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்ற இந்த முகாமில் நகர பகுதியில் உள்ள மகளிர் கலந்து கொண்டனர். இதில் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் வந்து தபால் நிலைய வங்கி கணக்கை தொடங்க தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு வங்கி கணக்கை தொடங்கி வைத்தனர். இந்த சிறப்பு முகாமை மன்னார்குடி தாசில்தார் கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்