களக்காடு அருகே கோவிலுக்குள் புகுந்து உலா வந்த கரடி - மக்கள் அச்சம்
கரடி நடமாட்டத்தால் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.;
நெல்லை மாவட்டம் களக்காடு ேமற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இவை அவ்வப்போது மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வருகிறது. அதுபோல் கோவில் வளாகத்தில் கரடி சுற்றித்திரியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
களக்காடு அருகே பெருமாள்குளம்-கல்லடி சிதம்பரபுரம் செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மலையடிவார பகுதியில் இருந்த வந்த கரடி ஒன்று கோவில் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து கோவிலுக்குள் புகுந்தது. அங்குள்ள வளாகத்தில் உலா வந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என தேடிப்பார்த்தது. அப்போது, அங்கிருந்த ஒரு துணி மூட்டையை கடித்துக்குதறியது. ஆனால் அதில் உணவு பொருட்கள் எதுவும் இல்லாததால் கரடி திரும்பிச் சென்றது.
கரடி கோவிலில் சுற்றித்திரியும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வௌியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். எனவே, அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் நடமாடிய கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.