வேலையில் இருந்து நின்றதால் டிரைவர் மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி

டிரைவர் வேலையில் இருந்து நின்றதால் அவரது மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடு்க்கப்பட்டுள்ளது

Update: 2022-07-01 17:13 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரை சேர்ந்த ராஜ்நேரு என்பவர் தனது இரு மகன்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது அன்பழகனிடம் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், " நான் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தேன். பின்னர் அந்த வேலையில் இருந்து நின்று விட்டேன். எனது 2 மகன்களையும் அதே பள்ளியில் சேர்த்திருந்தேன். இந்நிலையில் எனது மகன்களை பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்