முன்விரோதம் காரணமாகஇரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

வீரபாண்டி அருகே இரு தரப்பினர் மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-02-22 00:15 IST

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 65). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 19-ந்தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது முத்துவேல், அவரது உறவினர் பாண்டியன் உள்பட 5 பேர் சேர்ந்து ராஜாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் முத்துவேல், ராஜா, அருண்மொழி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்