8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (25 வயது). தனியார் நிறுவனத்தில் சவுண்ட் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியுடன் பழகிய சுப்பிரமணி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.