ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இதனிடையே, ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கான அவர் அரியர் பணத்தை பெற வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அரியர் பணத்தை பெற ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தருமாறு நகராட்சி காசாளர் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுத்தல்படி, நேற்று மாலை வாலாஜாபேட்டை நகராட்சிக்கு சென்ற ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் லஞ்சம் கொடுப்பது போல் போலி ரூபாய் நோட்டுகளை நகராட்சி காசாளரிடம் கொடுத்துள்ளார். அந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை நகராட்சி காசாளர் வாங்கியுள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது செய்யப்பட்டார்.