மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மாடு அறுவை கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-04 19:54 IST

மாடு அறுவை கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அறுவை கட்டணம்

கோவை செட்டிப்பாளையம், சத்தி ரோட்டில் மாநகராட்சி ஆடு, மாடு அறுவைமனைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு கொடுத்த ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.

இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் 5 ரூபாயாக இருந்த ஆடு அறுவைக்கு 100 ரூபாய், 10 ரூபாயாக இருந்த மாடு அறுவைக்கு 250 ரூபாய் என கட்டணத் தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதற்கு கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நேற்று கோவை ஆத்துப்பாலத்தில் அறுவை கட்டண உயர்வை கண்டித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாட்டு இறைச்சி கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக 10 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அறுவை கட்டணம் ஒரேடியாக 250 ரூபாயாக உயர்த்தி உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்