மாட்டிறைச்சி வியாபாரிகள் 2-வது நாளாக போராட்டம்

மாடு அறுவைமனையில் கட்டண உயர்வை கண்டித்து மாட்டிறைச்சி வியாபாரிகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.;

Update:2022-08-05 21:13 IST

கோவை மாநகர பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்கப்படும் மாடுகள் மாநகராட்சி சார்பில் செயல்படும் 2 மாடு அறுவைமனைகளில் வெட்டி கடைக்கு கொண்டு வருகின்றனர்.

அங்கு ஒரு மாட்டுக்கு ரூ.10 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.250-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் போராட்டம் 

அவர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சங்க தலைவர் பஷீர், நிம்மதி இஸ்மாயில், ஏ.கே.பி.பாஷா ஆகியோரின் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்தகைதாரர்கள் ஒரு மாட்டுக்கு ரூ.150 வசூலித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் அந்த குத்தகைதாரர் வெளியேற்றப்பட்டார். தற்போது மாநகராட்சியே ஒரு மாட்டுக்கு ரூ.250 வசூலிப்பது அதிகமாக இருக்கிறது.

சென்னையில் கூட ஒரு மாட்டுக்கு ரூ.30 தான் வசூலிக்கப்படு கிறது. எனவே அறுவைமனையில் ஒரு மாட்டுக்கு ரூ.50 கட்டண மாக நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்