தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.;

Update:2023-08-11 00:15 IST

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் தேசிய தேனீ மற்றும் தேனீ இயக்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் தோட்டக்கலை துறை மூலம் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்து நடைபெற உள்ளது. மேற்கண்ட கருத்தரங்கில் தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள தனியார்கள் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றி கருத்துக்கள் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்