ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தாமிபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தாமிபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்

Update: 2023-07-11 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் ஆற்றுக்குள் இறங்கி பிடி மணல் எடுத்து, தாலுகா அலுவலகம் முன்பு தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உறுதிமொழி எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள செங்கல் சூளைகள், பன்றி குடில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆற்றுக்குள் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும், தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் வியனரசு உறுதி மொழிகளை வாசிக்க அனைவரும் அதை ஏற்றுக் கொண்டன்ர. பின்னர், தாசில்தார் சிவகுமாரிடம் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில்

அகரத் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார், எஸ்.டி.பி.கட்சி பொறுப்பாளர்கள் முகமது யாசின், அபுபக்கர் சித்திக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் கண்மணி மாவீரன், ஏர் உழவர் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராசேசு, மக்கள் தமிழகம் கட்சித் தலைவர் காந்தி மள்ளர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்க சார்பில் பேராசியை பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், பத்மநாப பிள்ளை ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்