தொட்டமெட்டரை, பழையூரில்ரூ.1.40 கோடியில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜைகே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

Update:2023-08-17 01:15 IST

ராயக்கோட்டை

வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டமெட்டரை கிராமத்தில் இருந்து பந்தாரப்பள்ளி வரை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தார்சாலை, பழையூர் முதல் கினியன் பள்ளம் வரை ரூ.1 கோடியே 21 ஆயிரம் மதிப்பில் தார்சாலை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி, அப்பையன்முனிசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்