புதிய ரேஷன் கடை கட்டிட பணி
சருகனி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.;
தேவகோட்டை
சருகனி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் நாகனிசெந்தில் குமார் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர (கிழக்கு) தலைவர் சஞ்சய் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசி, பங்குத்தந்தை ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.