முடிகாணிக்கை மண்டபம் கட்ட பூமிபூஜை

மருதமலை அடிவாரத்தில் ரூ.89 லட்சத்தில் முடிகாணிக்கை மண்டபம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது;

Update:2022-08-29 20:35 IST


வடவள்ளி,ஆக.30-

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக மருதமலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 95 சென்ட் இடத்தில் முடிகாணிக்கை மண்டபம், குளியலறை, நவீன கழிப்பிடத்துடன் கட்டப்பட உள்ளது.

முன்னதாக தமிழகம் முழுவதும் கோவில்களில் கட்டுமான பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மருதமலைஅடிவாரத்தில் உள்ள இடத்தில் கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதே போல மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி கூடம், சமையலறை, உணவருந்தும் கூடம் ஆகியவற்றை ரூ.26.25 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது.  

மேலும் செய்திகள்