கால்நடைகளின் ரத்த மாதிரி சேகரிப்பு

பனப்பட்டி பகுதியில் கால்நடைகளின் ரத்த மாதிரி ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.;

Update:2023-03-08 00:15 IST


நெகமம்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், பனப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் 2 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் பனப்பட்டியை சுற்றி உள்ள கன்று, கிடாரி, மாடுகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.

இந்த பணி கோவை மாவட்ட கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கீதா முன்னிலை யில் நடைபெற்றது. ரத்த மாதிரிகள் ஆய்வு செய்த பிறகு முடிவு தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

முகாமில் டாக்டர் பரமேஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்