கோவில் பூட்டை உடைத்து அம்மன் தங்க தாலி திருட்டு

Update: 2023-03-03 19:30 GMT

அன்னதானப்பட்டி:-

சேலம் நெத்திமேடு, ஊஞ்சக்காடு முனியப்பன் கோவில் வளாகத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கடந்த 1-ந் தேதி இரவு 9 மணியளவில் கோவில் நடையை சாத்தி விட்டு பூசாரி சுப்பிரமணி (வயது 70) வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கோவிலை திறக்க அவர் வந்த போது, அம்மன் சன்னதி கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அங்கு அம்மனுக்கு அணிவித்திருந்த 6 கிராம் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்