திருப்பத்தூர்
பள்ளத்தூர் அருகே உள்ள மணச்சை கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு 17-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இப்பந்தயத்தை தி.மு.க. சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாண்டி மற்றும் மணச்சை கிராமத்தினர் கலந்து கொண்டனர்.