வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே பஸ் வசதி
வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே பஸ் போக்குவரத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.;
சிறுபாக்கம்
சிறுபாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமத்தில் புதிய பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன், மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், தி.மு.க.விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மங்களூர் அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.ெவ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வ.மேட்டூர்-நயினார்பாளையம் இடையே புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறிது தூரம் பஸ்சை ஓட்டிச்சென்றார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் வள்ளிமதுரம் கிராமத்தில் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, வீராங்கன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ராமசாமி, தி.மு.க. நிர்வாகிகள் சேகர், திருவள்ளுவன், ராமச்சந்திரன், செல்வராசு, ஊராட்சி துணை தலைவர் பெரியம்மாள், ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.