மோகனூர்:
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கால்நடை மருத்துவர் கலைமணி தலைமையில், எஸ்.வாழவந்தி, சின்னகரசப்பாளையம், மேலப்பட்டி, கே.ராசாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்.