குறைதீர்க்கும் நாள் முகாம்

குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது;

Update:2023-06-08 00:15 IST

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் 28 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்