கால்வாய், சாலை வசதி செய்ய வேண்டும்

கால்வாய், சாலை வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-09-21 23:21 IST


ஆம்பூர் தாலுகா கீழ்மிட்டாளம் கிராமம் பழையமனையில் முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதியை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்