கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது;

Update:2022-06-28 03:40 IST

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீசார் அறுகுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சுயம்புலிங்கம் என்ற கட்ட லிங்கம் (வயது 45) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுயம்புலிங்கம் மீது கஞ்சா வழக்கு உள்பட மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்