கார் மோதி மின்மாற்றி சேதம்

நெல்லிக்குப்பம் அருகே கார் மோதி மின்மாற்றி சேதமடைந்தது.

Update: 2023-07-17 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு பகுதி்யை சேர்ந்தவர் சுந்தர்ராமன்(வயது 34). டிரைவரான இவர் காராமணிகுப்பத்தில் இருந்து சுந்தரவாண்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கடலூர்-பாலூர் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் மோதி நின்றது. இதில் மின்மாற்றியின் ஒருபக்க கம்பம் முறிந்து கார் மீது சரிந்தது. இதனால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தர்ராமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்