கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலியானார்.;
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). தொழிலாளியான இவர் லட்சுமணபெருமாள் (40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே தாழையூத்து பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு நெல்லைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை லட்சுமணபெருமாள் ஓட்டினார். நாரணம்மாள்புரம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது பின்னால் வந்த கார்-மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிர் இழந்தார். லட்சுமணபெருமாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.