கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி

நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-10-16 01:58 IST

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் பூல்பாண்டி (வயது 25), கூலித்தொழிலாளியான இவர் நேற்று இரவில் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நான்கு வழிச்சாலையில் வந்து ெகாண்டு இருந்தார். அந்த சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பூல்பாண்டி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த பூல்பாண்டிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்