கார் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update:2023-08-08 00:48 IST

விழுப்புரம் அருகே உள்ள காடகனூரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 29). இவருடைய சகோதரி துபாயில் இருந்து வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ரகுபதி ஒரு காரில், காடகனூரில் இருந்து சென்னை புறப்பட்டார். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் வந்தபோது, ரகுபதி ஓட்டி வந்த கார், அவரது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்