குட்கா பொருட்களை விற்ற மளிகைக்கடைக்காரர் மீது வழக்கு

எருமப்பட்டியில் குட்கா பொருட்களை விற்ற மளிகைக்கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-04-19 00:15 IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரியில் மளிகை கடை நடத்தி வருபவர் துரைசாமி (வயது 43). இவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மளிகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 15 பாக்கெட் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் துரைசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்