கல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்கு

வடக்கு விஜயநாராயணம் அருகே கல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-04-11 02:26 IST

இட்டமொழி:

பரப்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வேதநாயகம் மகன் இஸ்ரவேல் பிரபாகரன் (வயது 44). இலங்குளம் பஞ்சாயத்து தலைவரான இவர் வடக்கு விஜயநாராயணம் அருகே சீலாங்குளத்தில் இருந்து வெங்கட்ராயபுரம் செல்லும் சாலையில் அரசு உரிமம் பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நெல்லையைச் சேர்ந்த புலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் உள்ளிட்ட 10 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், அங்கிருந்தவர்களை அவதூறாக பேசி மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரவேல் பிரபாகரன் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பவானி வேல்முருகன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்