வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு

ஓசூர் அருகே வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2022-06-04 22:50 IST

ஓசூர்:

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் சுபின் (வயது 27). இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர், 'ராஜீவ்காந்தி நகர் பகுதியில் நடந்து சென்ற போது, அங்கு வந்த பேடரப்பள்ளி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லால் பகதூர் (33), விஜய் (24), புவியரசன் (25), புட்டு (20) ஆகிய 4 பேரும் சேர்ந்து முன் விரோதத்தில் சுபினை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சுபின் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் லால்பகதூர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்