டாக்டரிடம் நிலம் அபகரிக்க முயற்சி; சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு

தேனி அருகே போலி ஆவணம் மூலம் டாக்டரிடம் நிலம் அபகரிக்க முயற்சி செய்ததாக சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-08-31 16:50 GMT

கோவை மாவட்டம் கைக்கோலாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு. இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவருடைய தந்தை பகவதிமுத்து, தேனி அருகே அன்னஞ்சி பகுதியில் 20 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி இருந்தார்.

அந்த நிலத்தை தனது தங்கைகள் மற்றும் சிலர் போலியான ஆவணத்தை பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயன்றதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வெங்கடேஷ்பாபு புகார் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, டாக்டர் வெங்கடேஷ்பாபுவின் தங்கைகள் சத்தியபாமா, கவிதா மற்றும் தேனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சண்முகவேல் மகன்கள் ராஜசேகர், விஜய்பாபு, தேனி சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்