குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிய 2 வியாபாரிகள் மீது வழக்கு
கோவை அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிய 2 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போல் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ஒருவரும் சிக்கினார்;
துடியலூர்
கோவை அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிய 2 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போல் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ஒருவரும் சிக்கினார்.
ரேஷன் அரிசி பதுக்கல்
கோவை குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் மேனகாவின் உத்தரவின் பேரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துடியலூர் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.எம்.நகர் மகாலட்சுமி அம்மன் தெருவில் உள்ள தகர சீடலான ஒரு குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 வியபாரிகள் மீது வழக்கு
அங்கு பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், எந்திரங்கள் மூலம் அரிசியை மாவாக அரைத்து கோழித்தீவ னத்துக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரி கள் கைப்பற்றினர். அதில் தொடர்புடைய வியாபாரிகளான பாலமுருகன், கோவிந்தன் ஆகியோர் மீது உணவு கடத்தல் தடுப்பு பதுக்கல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1100 கிலோ பறிமுதல்
கருமத்தம்பட்டி அருகே செகடந்தாளி சென்னியாண்டவர் கோவில் அருகே குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட் டார் சைக்கிளில் ஒருவர், அதிகாரிகளை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
அவரின் மேட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சுடலை கண்ணன் என்பது தெரிய வந்தது. அவர் மீது அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்தனர்.
வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக அவர் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.