ஆடி அமாவாசையையொட்டிமோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Update: 2023-07-17 19:00 GMT

மோகனூர்:

ஆடி அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்குவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நீர்நிலைகளுக்கு சென்று நீராடி, முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை மோகனூர் காவிரி ஆற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் எள், பச்சரிசி, தர்ப்பைப் புல் வைத்து வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் 2-வது அமாவாசையே சிறந்தது என கூறப்படுகிறது. இதனால் நேற்று முதல் அமாவாசையில் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்