திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிப்பு

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.;

Update:2023-10-21 22:21 IST

ஜோலார்பேட்டை

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுத படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் மலர் வளையம் வைத்து அனுசரிக்கப்பட்டது.

அதன் பிறகு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்ள முத்துமாணிக்கம், ரவீந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், விஜயகுமார், விநாயகம், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்