தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

Update:2022-07-26 21:06 IST


திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகரை அடுத்த லட்சுமி தியேட்டர் ரோடு அபிராமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). பனியன் நிறுவனத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் 80 அடி சாலை அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தின் செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 2 பேரும் செல்போனுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆறுமுகம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்