பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழா நடைபெற்றது;

Update:2023-05-01 00:15 IST

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டியில் உள்ள செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மாலையில் பெண்கள் உலக நன்மைக்காக வேண்டி கோவிலில் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இரவில் ஆரத்தி குடம், பால்குடம், எடுத்தும் அதிகாலையில் பூத்தட்டு ஏந்தி வந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் செல்வ விநாயகர், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்