உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைக்கு சான்றிதழ்; உதவி கலெக்டர் வழங்கினார்

உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைக்கான சான்றிதழை தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா வழங்கினார்.;

Update:2023-07-09 00:15 IST

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனுமதிக்கக்கோரி பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி திராவிடசெல்வி, கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி காந்திமதி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெகுநேரம கழித்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். மேலும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக இரு குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டினர்.

இந்தநிலையில் நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா இவர்களை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்த்த அவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு அவர்களிடம் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், "தாசில்தார் கொடுத்த சான்றை வைத்தே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கு கோட்டாட்சியர் அனுமதி தேவையில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்