தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி; எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
இந்தியாவிலேயே கடன்வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
திருவள்ளூர்,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போன் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
திமுக என்ற இஞ்ஜின் இல்லாத காரை கூட்டணி என்ற லாரி 10 ஆண்டுகளாக இழுத்துச் செல்கிறது. அதிமுகவை சிலர் விமர்சனம் செய்கின்றனர். அதிமுகதான் எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி. திமுக கூட்டணி வைத்தபோது பாஜக நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?
56 மாதங்கள் விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் திமுக எதையும் செய்யவில்லை. தேர்தலில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும். அதிமுக அழுத்தம் கொடுத்ததால் 100 நாள் வேலையை 125 நாட்களாக மத்திய அரசு அறிவித்தது. திமுக கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்டிகள் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்.
இந்தியாவிலேயே கடன்வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழக மக்களை கடனாளிகளாக்கி விட்டார் முதல்-அமைச்சர். கடனை செலுத்த வரி போடுவார்கள். அது மக்கள் தலையில் தான் வந்து விழும். கடனை குறைக்க நிதி மேலான்மை குழு அமைத்த பின்பு இன்னும் அதிகமாக கடம் வாங்கி இருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.