ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.;

Update:2025-12-30 20:37 IST

உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்

சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

கடற்கரை உட்புற சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்படும்

சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்

கடற்கரை உட்புற சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.

அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்