மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர் - எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-12-30 19:24 IST

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

பரப்புரை வாகனத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் பலராமன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பிராசர வாகனத்தில் ஏறிய பலராமன், எடப்பாடி பழனிசாமிக்கு வீர வாள் பரிசளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்