பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் சீருடையில் மாற்றம்.!

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு சபாரி சீருடை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-22 14:23 GMT

சென்னை,

தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு சபாரி எனப்படும் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் காக்கி சீருடை மற்றும் சீருடை அல்லாத கலர் உடையில் பணியில் ஈடுபடுவர். இந்த நிலையில் சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் சபாரி சீருடை அணிய வேண்டுமென்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆண் காவலர்களுக்கு சபாரி சீருடை வழங்கப்பட்டது. அதேபோல பெண் காவலர்களுக்கும் சென்னை பாதுகாப்பு பிரிவில் தற்போது சபாரி சீருடை வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்