முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்;
கமுதி
கமுதியில், தனியார் திருமண மண்டபத்தில், முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று மாலை கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். மேலும் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் 385 பேர் இதில் கலந்து கொண்டனர்.