மிளகாய் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பு எதிரொலியால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் பச்சைமிளகாய் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்பனையானது.;
திண்டுக்கல் காந்திமார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. வரத்து, தேவையை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் வரத்து அதிகரித்ததால் பச்சைமிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 வரை மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதன் பின்னர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் பச்சை மிளகாயின் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனை ஆகிறது. இதனால் பச்சைமிளகாயை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.