புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.;

Update:2022-05-27 02:16 IST

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் இருதயராஜ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு நவநாள்கள் திருப்பலியை பங்குத்தந்தையர் நிறைவேற்றினர். தொடர்ந்து நடைபெற்று வந்த திருவிழாவில் கடந்த 2 நாட்களாக மின் அலங்கார தேர்பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலய துணை அதிபர் அற்புதராஜ், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் குழந்தை, கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்