கடலூர் அரசு பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் அரசு பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2023-03-03 00:15 IST

கடலூர் - சென்னை செல்லும் அரசு சொகுசு பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் இயங்குவதை கண்டித்து கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மத்திய சங்க சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொருளாளர் அரும்பாலன், மத்திய சங்க செயலாளர் ராஜ், சபியுல்லா, ராமதாஸ், தினேஷ், கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்