நகராட்சி கடைகளை இடிக்கும் பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு

ஆற்காடு நகராட்சி கடைகளை இடிக்கும் பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-21 19:03 GMT

ஆற்காடு நகராட்சிக்கு சொந்தமான மாங்காய் மண்டி, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வணிக வளாக கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. இதனால் சேதம் அடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. அந்த கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாங்காய் மண்டி வளாகத்தில் உள்ள கடைகளை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார். நகர மன்ற உறுப்பினர் அனு அருண் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்