ரெயில் நிலையத்தில் தூய்மை பணி

அம்பை ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.

Update: 2023-10-04 20:38 GMT

அம்பை:

அம்பை ெரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெகா தூய்மைப்பணி நடைபெற்றது. ெரயில் நிலைய மேலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். என்ஜினீயர்கள் தனராணி, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி. பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அம்பை ெரயில் நிலைய வளாகம் முழுவதும் தேங்கி இருந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

அம்பை நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதி பரமசிவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம், வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி ஜோயல், நகர வியாபாரிகள் சங்க துணை தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதிகளிலும், ஊர்க்காடு பகுதிகளிலும் நகராட்சி சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை விழிப்புணர்வு குறித்து பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. மேலும் தெருக்களில் சுத்தம் செய்யும் பணியை யூனியன் தலைவர் பரணிசேகர் தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர், துணைத் தலைவர் சாமுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சங்கர குமார், ஊராட்சி செயலர் தங்கபிரசனா, மக்கள் நலப்பணியாளர் கலைசெல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு பெல்ஜியம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி நடந்தது. தலைமை மருத்துவர் ரிசிந்த்குமார் தொடங்கி வைத்தார். இதில் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்