விருதுநகர் ெரயில் நிலையத்தில் தூய்மை திட்டம்
விருதுநகர் ெரயில் நிலையத்தில் தூய்மை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன.;
மத்திய ெரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இணைந்து ஒவ்வொரு பாதையும் சுத்தமான பாதையே என்ற தூய்மைதிட்டத்தினை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் ெரயில் நிலையத்தில் விருதுநகர் எஸ்.பி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ெரயில் பாதையை தூய்மைப்படுத்தினர். இதில் ெரயில் நிலைய மேலாளர் சதீஷ், ெரயில் நிலைய சுகாதார ஆய்வாளர்கள் ஆப்ரின், மஞ்சுளா, ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி, தலைமை ஆசிரியர் தீப லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.