கோவை கார் வெடிப்பு சம்பவம் - கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
கோவை நகரில் உள்ள சில அமைப்புகளின் தரவுகளை சேகரிக்கும் பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை,
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.