கோவை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை - சீமான் கண்டனம்

கோவை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 10:33 GMT

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி ஜனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தும் முயற்சி நாட்டை பேரழிவினை நோக்கி செல்ல வழிவகுக்கும். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்