வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கலவை பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-08-04 00:20 IST

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேற்று கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரூ.4.78 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டிடத்தை உடனடியாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் 13-வது வார்டு விவேகானந்தர் சாலையில் ரூ.73½ லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு சாலையின் நீளம், அகலத்தை பொறியாளர் மூலமாக அளந்து பார்த்தார்.

மேலும் ஒத்தவாடை வீதியில் உள்ள பூங்காவில் செடிகள் நடவும், புல் தரை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சிவன் கோவில் அருகே உள்ள பூங்கா பணிகள் 3 மாத காலமாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக முடிக்கவும் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா, செயல் அலுவலர் முத்து, இளநிலை பொறியாளர் அருண், கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தாசில்தார் இந்துமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்